விமானம் புறப்பட முன்னரே எதுவும் வேலை செய்யவில்லை: அதிரும் வீடியோ !

விமானம் புறப்பட முன்னரே எதுவும் வேலை செய்யவில்லை: அதிரும் வீடியோ !

வீடியோ கீழே இணைப்பு

விமானம் புறப்பட முன்னரே, ஆசனத்திற்கு முன்னால் உள்ள திரை, கன்றோலர்கள் மற்றும் ஏர்-கண்டிஷன் எதுவுமே வேலை செய்யவில்லை என்னும் செய்தி கசிந்துள்ளது. விமானத்தில் ஏறி உட்கார்ந்த உடனே, தமக்கு முன்னால் உள்ள திரை, வேலை செய்யவில்லை என்றும் ஏர் -கண்டிஷன் வேலை செய்யவில்லை என்றும் ஒரு பயணி வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. விமானத்தின் எஞ்சினுக்கு செல்லும் , மின்சாரம் தடைப்பட்டதால் தான் எஞ்சின் செயல் இழந்து போய் இருக்க கூடும் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ள நிலையில். விமானத்தில் ஏற்கனவே கோளாறு இருந்தும் இதனை சரி செய்பவர்கள் அஜாக்கிரதையாக இருந்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு பயணி, ஆகாஷ் வத்ஸா, தனது பயணத்தின் போது விமானத்தில் உள்ள மின்சாதனங்கள், காற்றோட்டம், டிவி திரைகள் போன்றவை செயல்படவில்லை என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த விமானம் விபத்துக்குள்ளாகும் சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் இந்த வீடியோவை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

அவர் டெல்லியில் இருந்து அகமதாபாத் சென்ற விமானத்தில் இருந்ததாகவும், விமானத்தின் பதிவு எண் VT-ANB என்பதையும் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு எண் விபத்துக்குள்ளான விமானத்துடன் பொருந்துவதாக தெரிகிறது. விமானத்தின் பயண தரவுகள் காட்டுவதுபடி, Boeing Dreamliner காலை டெல்லியில் இருந்து அகமதாபாத் நகருக்கு பறந்தது.